விடாது கருப்பு : ஓபிஎஸ் தரப்பு விளாசல் 
 

marudhu111

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட மாட்டோம் என தனது வேட்பாளரை ஓ.பி.எஸ் திரும்பப் பெற்றுக் கொள்ள...

தங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கவில்லை என போட்டியிலிருந்து  டி.டி.வி தினகரன் தரப்பும்
விலகிக் கொள்ள..

திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர்.வரலாறு படைத்தது போலவே எடப்பாடியும் வாகைசூடப் போகிறார் என வாய் வாடகைகாரர்கள்  ஏகத்துக்கும் கூவ...

இரட்டை இலை சின்னமே கிடைக்காது போனாலும் சுயேச்சை சின்னத்திலேயே எடப்பாடி ஜெயிப்பாருன்னு இன்னொரு கும்பல் வாங்கிய பேட்டாவுக்கு மேல கதாகலாட்சேபம் செய்ய..

கடைசியில் பார்த்தா கடந்த 2021 சட்ட மன்ற பொதுத்தேர்தலில் த.மா.கா .வேட்பாளர் பெற்ற ஓட்டுக்களை விட சுமார் இருபதாயிரம் வாக்குகள் குறைவாக பெற்று டெபாசிட்டுக்கே தண்ணி குடித்திருக்கு தரைப்பாடி தரப்பு.

நல்லவேளை ஓ.பி.எஸ்ஸும் தினகரனும் தங்கள் வேட்பாளர்களை திரும்பப் பெற்றனர். ஒருவேளை அவர்களும் போட்டியிட்டு தங்கள் பங்குக்கு ஓட்டுக்களை பிரித்திருந்தால், எடப்பாடி கம்பெனி நிலைமை ஆரூத்ரா கோல்டு கம்பெனி போல அம்போன்னு போயிருக்கும்.

அந்த வகையில், கை சின்னத்திடம் கட்டுத் தொகையை இழக்காமல்.. டெபாசிட்டை காப்பாற்றி கொடுத்ததே ஓ.பி.எஸ்ஸும் தினகரனும் தான் என எடப்பாடியின் வேட்பாளர் தென்னரசே மனம் உருகி பேசியிருக்கிறார்.

ஆக, மொத்தத்தில் பட்டு வேட்டி பற்றிய கனவில் ஆழ்ந்திருந்தபோது, கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது என்னும் கவிதையை சொல்லி சிரிக்கிறார்களாம், எடப்பாடி வட்டத்துக்குள் உள்ள ஆட்களே...

ஆம்...துரோகமே வடிவான வெல்லம் உருட்டி பழனிச்சாமியின் பாவத்துக்கான அறுவடைக்காலம் தொடங்கி விட்டது.

எப்போதும் தொடக்கங்கள் கிழக்கில் இருந்துதானே உதிக்கும்.. எடப்பாடிக்கும் அது ஈரோட்டு கிழக்கில் இருந்தே துவங்கி இருக்கிறது.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். 

 

Share this story