20 மாவட்டங்களுக்கு விசிட்.. திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு..

By 
kki

திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் 20 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை நேரில் சந்தித்து, அவர்கள் வழங்கிய பரிந்துரைகளை பெற்றுள்ளனர்.

2024 மக்­க­ளவை தேர்­த­லை­யொட்டி, தேர்­தல் அறிக்கை தயா­ரிப்­ப­தற்­காக தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனி­மொழி கருணாநிதி எம்.பி. தலை­மை­யில் 11 பேர் கொண்ட குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறி­வு­ரைப்­படி இக்­குழு பிப்ரவரி 5 ஆம் தேதி முதல், தமிழ்­நாட்­டின் முக்­கிய நக­ரங்­க­ளுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்து பரிந்துரைகளை பெறும் பணியை தொடங்கி உள்­ளது.

உரி­மை­களை மீட்க ஸ்டாலி­னின் குரல் - நாடா­ளு­மன்­றத்­தில் ஒலித்­திட வேண்­டிய தமிழ்­நாட்­டின் கருத்­து­கள் என்ற தலைப்­பில், பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு வருகிறது. பிப்ரவரி 5 ஆம் தேதி தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்கள், பிப்ரவரி 6 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள், பிப்ரவரி 7 ஆம் தேதி மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், பிப்ரவரி 9 ஆம் தேதி கிருஷ்ணகிரி சென்றனர்.

தருமபுரி மாவட்டங்கள், பிப்ரவரி 10 ஆம் தேதி காலையில் கோவை, நீலகிரி, பிற்பகலில் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை சந்தித்து பரிந்துரைகளை பெற்றனர். திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று (11.02.24) சேலம் மாவட்டத்தில் மக்களை சந்தித்தனர். சேலத்தில் அமைந்துள்ள ஹோட்டல் சென்னிஸ் கேட்வே- இல் வைத்து தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்றனர்.

அதில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். திமுக துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் கனி­மொழி கருணாநிதி எம்.பி., திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., திமுக மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., திமுக மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் பரிந்துரைகளை மக்களிடமிருந்து பெற்றனர்.

சேலம் கிழக்கு மாவட்டச்செயலாளர் சிவலிங்கம், சேலம் மத்திய மாவட்டச்செயலாளர் இராஜேந்திரன், நாமக்கல் மேற்கு மாவட்டச்செயலாளர் மதுரா செந்தில், மக்கள் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். கால்நடை சந்தை வியாபாரிகள், கொலுசு உற்பத்தியாளர் சங்கங்கள், லாரி உரிமையாளர்கள், வணிகர் சங்கங்கள், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், மக்கள் நலச்சங்கங்கள், தொழில் முனைவோர், பல்வேறு அமைப்புகளைச்சேர்ந்தவர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்த பரிந்துரையை ஆர்வமுடன் வழங்கினர்.

பரிந்துரைகளில் சில பின்வருமாறு, 

'நான்கு வழிச்சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு தனி பாதை அமைக்க வேண்டும். ஹிட் & ரன் சட்டத்தை அமல்படுத்தினால் மோட்டார் தொழில் ஸ்தம்பித்துவிடும். சட்டத்தை அகில இந்திய அளவில் அமல்படுத்தக்கூடாது. சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து பன்னாட்டு விமான சேவைகள் வழங்க வேண்டும். சேலம் விமான நிலையத்திற்கு கலைஞர் பெயரை சூட்ட வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்" ஆகியவை ஆகும்.
 

Share this story