கால் பதித்துப் போன இடத்தை கழுவி விட்ருங்கப்பா : ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தல்
 

marudhu115

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :

'இடிஅமீன் எடப்பாடியே.. காவல்துறை பாதுகாப்போடும், உன் கத்தை பணத்துக்கு மாரடிக்கும் கூலிக் கும்பலோடும், நீ தென்மாவட்டத்துக்குள் வந்து பல்லிளித்து விட்டு போயிட்டா, இப்பகுதி மக்கள் உன்னை ஆதரிக்கிறதா அர்த்தமாகி விடுமா..

உப்பு உரப்பு போட்டு சாப்பிடுறவனும், உன்னோட பத்தரை சதவீத இடஒதுக்கீட்டால்தான் பெத்த புள்ளைகளின் எதிர்காலம் என்னாகுமோன்னு பதறித் துடித்தவனும், துரோகம் என்ற சொல்லை வெறுக்கிற மனசாட்சி கொண்ட மக்களும்.. 

எட்டுத் தேர்தல் தோல்வி எடப்பாடியே.. உன் மூஞ்சிய பார்த்து காறித் துப்புவானே தவிர, உன் நெறியற்ற அரசியலை நேர்மையற்ற அபகரிப்பை அருவருப்போடு வெறுப்பானே தவிர, உன்னை ஒரு போதும் ஆதரிக்க மாட்டான்.

நான் கண்ணன் குலத்து கவுண்டன் என்று கடிதாசி போட்டு ஈரோட்டுல நீ ஓட்டுக் கேட்டதையும், நானும் கவுண்டன், எடப்பாடியும் கவுண்டன்,ஆக.. ஒரு கவுண்டன்தான் தமிழ் நாட்டை ஆள முடியும் என்று செங்கோட்டையன் சாதி வெறிகொண்டு சவடால் பேசியதையும் சமத்துவமா வாழும் தென்னாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள்.

அதிலும், குறிப்பாக புரட்சித் தலைவர் உருவாக்கிய சமத்துவ இயக்கத்தை ஒரு சாதிக் கட்சியாக்கத் துடிக்கும் உன்னை உண்மையான கழகத் தொண்டன் மன்னிக்கவே மாட்டான். 

தரையில் தவழ்ந்து, முதலமைச்சர் பதவியை சசிகலா அம்மையாரிடம் யாசகம் பெற்று விட்டு, அவரையே நாயின்னு நன்றி மறந்து நீ பேசியதையும், நாலரை வருடங்கள் நீ ஆட்சி நடத்த உதவிகரமா இருந்த ஓ.பி.எஸ் மீது பொறுக்கிகளை ஏவி விட்டு, தண்ணீர் பாட்டில்களை வீசி அவரோட தாயை ஏசியதையும், மான ரோசமுள்ள மறக்குலமும் மறக்காது. மனசாட்சி உள்ள மனித குலமும் மன்னிக்காது.

ஒரு பாதை நிலத்துக்காக, பங்காளிகள் இருவரை கொலை செய்துவிட்டு சிறைக்குப் போன உன்னை காப்பாற்றி அரசியலுக்குள் இழுத்துவிட்ட சேலம் கண்ணன் முத்துச்சாமி தொடங்கி, சாதிப்பாசத்தில் உனக்கு தர்மத்துக்கு மாறாக பல வழிகளில் உதவிய இன்றைய அண்ணாமலை கவுண்டர்வரை  அனைவருக்கும் நீ செய்ததும், செய்து வருவதும் துரோகம் மட்டுமே.

அதனால, பூலித்தேவன் தொடங்கி வீரன் அழகுமுத்துக்கோன், வீரன் சுந்தரலிங்கம், கட்டப்பொம்மன், பெரும்பிடுகு முத்தரையர், வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, மருதிருவர், வேலுநாச்சி, குயிலி பெருந்தலைவர் காமராஜர், பசும்பொன் சித்தர்  என எண்ணில்லா தியாகசீலர்கள்..

மனிதசக்தி கடந்த மகாசக்திகளாக  உலவிய, இம்மண்ணும் அந்த மகாத்மாக்களின்  பாதத்தடம் பதிந்த இந்த தேமதுரத் தென்னாட்டுச் சீமையும் உன்னைப் போன்ற துரோகமே வடிவான மனிதப் பிழைகளை என்றும் ஏற்காது; ஏறெடுத்துப் பார்க்காது என்பது சத்தியம்.

அதனால, உன் காசுக்கு பீ தின்னும் கபோதிகளை கூட்டிக்கொண்டு, ஜநூறுக்கும் முன்னூறுக்கும் ஆள் திரட்டிக்கொண்டு, அசலூரு கூலிகள் சகிதமாக முக்காடு போட்டு, இங்கு நீ முகம் காட்டிப் போனாலும், எப்பாடுபட்டு நீ எத்தனை வித்தைகள் செய்தாலும், இங்கே உன் பப்பு வேகாதுலே..

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
 

Share this story