வாசிங்க..ஒரு கணம் யோசிங்க : ஓபிஎஸ் தரப்பு..

marudhu163

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ், எரிதணலாய் வினவியுள்ள வரலாற்றுக்குறிப்புகள் வருமாறு :

'பொப்பிலி அரசர் தொடங்கி, பி.டி.ராஜன், கர்மா வெங்கட்ட ரெட்டி நாயுடு, மூதறிஞர் ராஜாஜி, தெங்குட்டுரி பிரகாசம், ஓ.பி.ராமசாமி ரெட்டியார், ராஜபாளையம் குமாரசாமி ராஜா, 

பெருந்தலைவர் காமராஜர், பெரியவர் பக்தவத்சலம், பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், டாக்டர் கலைஞர், புரட்சித் தலைவர் எம்ஜிஆர், அன்னை ஜானகி ராமச்சந்திரன், 

புரட்சித் தலைவி அம்மா, ஓ.பன்னீர்செல்வம், மு.க.ஸ்டாலின் என தமிழகத்தை ஆட்சி செய்த முதல்வர்களில்
யாராவது ஒருவர் எடப்பாடி போல முதலமைச்சர் பதவியை கூவத்தூரில் குத்தகை எடுத்தது உண்டா..

தரையில் தவழ்ந்து, தங்கமும் ரொக்கமும் தந்து முதல்வராக முடி சூடியது உண்டா..

அது போலவே, கட்சியை அபகரிக்க விதிகளை திருத்தி பொதுக்குழு என்பதாக பொறுக்கிக்குழு நடத்தி, முன்மொழிய பத்து, வழிமொழிய பத்துன்னு பித்தலாட்டம் செய்ததுண்டா..

விமான நிலையம் முதல், வீதிவழி கூட்டங்கள் வரை அஞ்சி நடுங்கி கூடுதல் காவல்துறை பாதுகாப்பு கேட்டு.. அதுவும் தன் கட்சிக் காரர்களே தாக்குவார்களோ என குலை நடுக்கம் கொண்டு அலையும் எடப்பாடி போன்ற இன்னொரு ஆளை இந்தியா பார்த்ததுண்டா.. 

ஆக..எடப்பாடி ஒரு கலியுக கரும்புள்ளி தானே..

இந்நிலையில், 'என்னைப் போல இன்னும் ஒரு லட்சம் பழனிச்சாமி இருக்கிறார்கள்' என்கிறது இந்த கலியுக கரும்புள்ளி..

அதுசரி, 'காசு பணம் கொடுத்து, கான்ட்ராக்ட் கொடுத்து, காரு கொடுத்து, ஒன்றரைக் கோடி தொண்டர்களில் ஒரு லட்சம் பேரைதான் கெடுக்க முடிஞ்சது' என்பதை திருவாளர் வெல்லமுருட்டி பழனி விரக்தியோடு கணக்குச் சொல்லிருக்கிறார் என்பதே உண்மை.

பரவாயில்லை.. இந்த எண்ணிக்கை என்பது அரிசியில் கல் கலந்த அளவுதான். ''பொறுக்கி'' எடுத்து அப்புறப்படுத்தி, கழகத்தை சுத்திகரிப்பு செய்ய வேண்டியதுதான்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

 

Share this story