அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் : முதல்வர் ஸ்டாலின் உறுதி

We will fulfill all promises Chief Stalin's commitment

கிராம சபைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கிராம சபைக் கூட்டம் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் கிராமங்களை தவிர்த்து, மற்ற அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்  நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 420 ஊராட்சிகளில் தேர்தல் நடைபெறும் கிராமங்களை தவிர்த்து, 376 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. 

அதில், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களுடன் கலந்துரையாடினர்.

கிராம சபைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “கிராம சபைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். 

அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் கடமை எங்களுக்கு உள்ளது. அதனை படிப்படியாக நிறைவேற்றுவோம்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது குறித்து, மாவட்ட ஆட்சியரிடம் வாரந்தோறும் கேட்டறிவேன். 

கரையாம்பட்டியில், கதிரடிக்கும் களம் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். பாப்பாப்பட்டியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் நீர் தேக்க தொட்டி அமைக்கப்படும். 

எந்த வேற்றுமையும் பார்க்காமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்” என்றார். 
*

Share this story