ஆட்சியாளர்களின் உண்மையான அரசு பணி எது?: வழக்கறிஞர் எம்.ஜி.ஆர். நகர் கே.புகழேந்தி கருத்து..

By 
mgrp2

சென்னை எம்.ஜி.ஆர். நகர் சக்தி வினாயகர் கோவில் அருகில், கோடை வெயிலின் தாக்கத்தை போக்க, இன்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. இந்த மக்கள் நலப்பணி 51 நாட்கள் என குறிப்பிடப்பட்டு, தொடர்ந்து நிகழ்கிறது. 

சாந்தா கிருஷ்ணன் தொண்டு அறக்கட்டளை சார்பில் நடைபெறுகிறது. 'உழைக்கும் மக்களுக்கும் மற்றும்  வெயிலில் சோர்ந்து வரும் அனைவரும் நீர்மோர் பருகி, அவர்கள் சொல்லும் நன்றி எனும் மனநிறைவே, எங்கள் மகிழ்ச்சி' என அட்சய பாத்திரமாக தொண்டாற்றி செயல்பட்டு வருகிறது. 

இந்த மக்கள் நலப்பணி குறித்து, வழக்கறிஞர் எம்.ஜி.ஆர். நகர் கே.புகழேந்தி கூறியதாவது:

'கத்திரி வெயிலின் தாக்கம் உடலால் உழைத்து வாழும் மக்களை வாட்டும். இந்த சித்திரை மாதத்தில், அனைத்து சிவாலயங்கள் மற்றும் வைணவ ஆலயங்களிலும் வெயிலில் வாடும் மக்களுக்கு மோர் கொடுக்க துவங்கி உள்ளனர்.  

இது மட்டும் அல்லாது, கத்திரி வெயிலில் பணிபுரியும் அனைத்து காக்கி சேவகர்களுக்கும், முந்தைய ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் கொடுத்ததுபோல, அரசே குளிர் பானங்கள் கொடுக்க வேண்டும்.  

முக்கியமாக, போக்குவரத்துக் காவல் பணியாளர்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் ஓய்வு கொடுக்க வேண்டும். இதுதான் ஆட்சியாளர்களின் உண்மையான அரசு பணி.

அரசு தனது பணியாளர்களை சரிவர வேலை செய்ய, ஆதரவு மற்றும் ஊக்குவித்தல் தான் அரசு செவ்வனே செயல்பட வைக்கும்' என வழக்கறிஞர் எம்.ஜி.ஆர். நகர் கே.புகழேந்தி தெரிவித்தார்.

Share this story