சாராயத்தை ஒழிப்பதற்கு என்ன வழி? : கவிஞர் வைரமுத்து விளக்கம்

By 
vairamuthu

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் கள்ள சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து, கள்ள சாராயத்தை ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து பல்வேறு வழக்குகளை பதிவு செய்து ஏராளமானோரை கைது செய்துள்ளனர்.

இந்த கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து 'ஒன்றிய அரசு ஒன்றி வந்தால் சாராயத்தையே ஒழித்துவிடலாம்' என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

"சாராயம் ஒரு திரவத் தீ, கல்லீரல் சுட்டுத் தின்னும் காட்டேரி, நாம் விரும்புவது கள்ளச் சாராயமற்ற தமிழ்நாட்டை அல்ல; சாராயமற்ற தமிழ்நாட்டை. மாநில அரசு கடுமை காட்டினால், கள்ளச் சாராயத்தை ஒழித்து விடலாம். ஒன்றிய அரசு ஒன்றி வந்தால் சாராயத்தையே ஒழித்து விடலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Share this story