விஜய் கட்சியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன?

By 
vijay6

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை கடந்த மாதம் தொடங்கினார். அந்த கட்சி குறித்த அறிவிப்பை விஜய் வெளியிட்டதும் அரசியல் வட்டாரம் முழுக்க விஜய் கட்சி குறித்த பேச்சு தான் பரபரப்பாக இருந்தது. கட்சி அறிவிப்பை வெளியிட்டதும் பெயர் சர்ச்சையில் சிக்கியது தமிழக வெற்றிக் கழகம். பின்னர் கட்சிப் பெயரில் உள்ள உடனடியாக நீக்கி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இதையடுத்து கட்சி நிர்வாகிகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அக்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை ஆன்லைனில் தான் நடைபெறும் என்றும் அதற்காக பிரத்யேக செயலி ஒன்று தயாராகி வருவதாக கூறப்பட்டது. அதில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த செயலி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது தான் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பாக இருந்தது.

கடந்த சில நாட்களாக விஜய் கட்சி பற்றிய செய்திகள் எதுவும் வெளிவராமல் கப்சிப் என இருந்த நிலையில், தற்போது அக்கட்சியின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு பற்றிய தகவல் கசிந்துள்ளது. அதன்படி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பிரத்யேக செயலில் வருகிற புதன் அல்லது வியாழக் கிழமை பயன்பாட்டுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மே மாதத்திற்குள் அதிக பட்ச உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறதாம்.

அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளை கட்சிக்காக 100 மாவட்டங்களாக பிரித்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுக்கும் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாம். அதில் யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது என்பது குறித்த அறிவிப்பு இன்னும் 10 நாட்களில் தெரியவருமாம். இதனால் இம்மாதம் 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கை நடத்துவதே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் இலக்காக இருக்கும் என தெரிகிறது.

Share this story