யார் அந்த முக்கிய புள்ளி.? பாஜகவில் இணையாததற்கு காரணம் என்ன.? அண்ணாமலை கூறிய பரபரப்பு விளக்கம்..

By 
mkkm

தமிழகத்தில் அதிமுகவில் இருந்து பாஜகவிற்கும், பாஜகவில் இருந்து அதிமுகவிற்கும் நிர்வாகிகள் தாவி வரும் நிலையில், பாஜகவில் முக்கிய அரசியல் புள்ளி இணைய இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். இதற்காக கோவையில் இணைப்பு விழாவிற்காக நடத்தித்திர விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் யாரும் வராத காரணத்தால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பாக திருப்பூரில் நடைபெற்ற பாதயாத்திரையில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பெரிய புள்ளி ஒருத்தர் இல்லை, நிறைய பேர் பாஜகவில் இணைவார்கள். பெரிய புள்ளி நாங்கள் சொல்லும் இடத்தில் இணைக்கனும் என்ற அவசியம் இல்லை. சில பேருக்கு டெல்லி சென்று இணைய வேண்டும் என்ற ஆசை உள்ளது. 

வெளியில் இருந்து பெரிய புள்ளி வரும் பொழுது எங்கள் கட்சியிலும் பெரிய புள்ளி உள்ளார்கள். அவர்களையும் சமாதானம் செய்ய வேண்டும். கட்சியில் இருப்பவர்கள் இத்தனை ஆண்டுகள் உழைத்திருக்கிறார்கள். வெளியில் இருந்து வருகிறார்கள். இதனால் கட்சியில் இருப்பவர்களை சமாதானம் செய்ய வேண்டும். பாஜகவில் இணைபவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருக்கலாம். முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கலாம் என தெரிவித்தார்.  

விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு வந்துள்ளார்கள். கன்னியாகுமரி  பாஜகவின் வலிமையான பகுதி. நிறைய தலைவர்கள் உள்ளார்கள். ஒரு எம்எல்ஏ இரண்டரை ஆண்டு பொறுப்பு இருக்கும் பொழுது பதவியை ராஜினாமா செய்து விட்டு வருகிறார்கள். அப்படி இருக்கும் பொழுது கட்சியில் இருப்பவர்களிடம் கலந்து பேசி, கட்சியில் இருப்பவர்களையும் சமாதானம் செய்ய வேண்டும். வெளியே இருந்து வரக்கூடிய விஜயதாரணியையும் கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

மிகப்பெரிய ஆள் பாஜகவிற்கு வரவுள்ளனர். கட்சியும் அவர்களை ஆத்மார்த்தமாக ஏற்றுக்கொள்ளும். வேறு மாநிலத்தை போல் வந்தவர்கள் திரும்பி செல்லக்கூடாது. அதிமுகவில் பாஜக எம்எல்ஏக்கள் இணைய இருப்பதாக வெளியான தகவலுக்கு பதில் அளித்த அவர், அதிமுகவிற்கு எந்த பாஜக எம்எல்ஏ வருகிறார்கள் என அம்மன் அர்ஜூனினடமே கேளுங்கள். பாஜகவை கட்சியாகவே  மதிக்கவே மாட்டேன் என்று கூறியவர்கள் இன்று பாஜகவை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். மதியமும் பாஜக , இரவும் பாஜக என பேசி வருகிறார்கள் என அண்ணாமலை தெரிவித்தார்.  

Share this story