யார் கிரிமினல்? : ஓபிஎஸ் தரப்பு சரமாரி கேள்வி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் எழுப்பியுள்ள கேள்விக்கனல் வருமாறு :
பத்தரை சதவீத பாரபட்ச ஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் சமூகங்களின் உரிமைக்குரலாக ஒலித்தவன் கிரிமினலா.. இல்லை, உரிமைக்குரல் எழுப்பிய இளைஞனுக்கு உரிய பதில் சொல்லாது, கோல் அடிக்க முடியாத கோழை, ஆள் அடிப்பான் கதையாக, அல்லக்கைகளை
ஏவி விட்டு, கேள்வி எழுப்பிய தம்பியை அடித்து உதைத்த கேடு கெட்ட கும்பல் கிரிமினலா..
கடல் தாண்டி சென்று, கடுமையாக உழைத்து, ஊர் திரும்பிய இளைஞன் கிரிமினலா.. இல்லை, உழைக்காமலே ஊரை அடித்து ஊரெல்லாம் சொத்துக்களை குவித்திருக்கும் உதயகுமார், செல்லூரு செல்வந்தர் செட்டப் செல்லப்பா கிரிமினலா..
தரையில் தவழ்ந்து பதவியை வாங்கிவிட்டு, தந்தவரை நாய் என்றவன் கிரிமினலா.. இல்லை, அந்த தரங்கெட்ட செயலை நேருக்கு நேர் நின்று நீதி கேட்டவன் கிரிமினலா..
குத்துக்கோல் பிடித்து கொலைகளை செய்தவன்; பாதை நிலத்தை எழுதிக் கொடுத்து பக்குவமாக தப்பியவன்; கொடநாடு பங்களாவில் கொலை கொள்ளை நடத்தியவன் கிரிமினலா.. இல்லை, இந்த அக்கிரமப் பேர்வழியின் முகம் பார்த்ததும் அறச்சீற்றம் கொண்டவன் கிரிமினலா..
எடப்பாடி யோக்யதை உலகுக்கே தெரியும். அவரை எதிர்நின்று கேள்வி கேட்ட இளைஞன் ராஜேஷை வருங்கால வரலாறு வீரனென்று பதியும்.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
*