பொங்கலுக்குப் பிறகு, தொடர்ச்சியாக ஊரடங்கு அமலாகுமா? : மக்கள் நல்வாழ்வுத்துறை விளக்கம்

Will the curfew continue after Pongal  Public Welfare Description

தமிழகத்தில், ஏப்ரல் 14-ம் தேதிக்கு முன்னதாக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட 4 லட்சம் நபர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு, அனைத்து தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில்,

'முன்களப் பணியாளர் என்ற முறையில், இன்று பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொண்டேன். 

அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள்.

தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்' என கூறியுள்ளார்.

* மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம், தெரிவிக்கையில்,

'தமிழகத்தில், பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை. 

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது' என்றார்.
*

Share this story