வெற்றி என்பது முக்கியமல்ல; எவ்வளவு வாக்கு என்பதே முக்கியம் : அண்ணாமலை அதிரடி..

By 
bjpaa

வாக்கு எண்ணிக்கை ஒரு வார காலமே உள்ள நிலையில், தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவரின் ஆலோசனைக் கூட்டம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட பாஜகவிற்கு பாராட்டுகளை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,

வாக்கு எண்ணிக்கையின் போது பூத் முகவர்கள் செயல்படும் முறை குறித்து ஆலோசனை வழங்கினார். ஜூன் 4ஆம் தேதி பாஜகவின் வெற்றியைக் கொண்டாடத் தயாராக இருங்கள். தாமரை படர்ந்திருக்கும் காட்சியை ஜூன் 4க்குப் பின் அனைவரும் பார்ப்பார்கள் என தெரிவித்தார். ஜூன் 4ஆம் தேதிக்குப் பின் வடக்கு, தெற்கு என்ற பேச்சு இருக்காது என அண்ணாமலை கூறினார். 

தென்னிந்தியாவில் இந்த முறை அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை நாம் பெற இருக்கிறோம், டெல்லியில் பாஜக இந்த முறை 60% வாக்குகள் பெறும், 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும், அது காலத்தின் கட்டாயம் என கூறியவர், டெல்லி, குஜராத் போன்ற இடங்களில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெல்லும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார். 

செய்தியாளர்களிடம்  தெரிவிக்கையில், 'தமிழகத்தில் இருந்து பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்றம் செல்வார்கள். எத்தனை இடங்களில் வெற்றி என்பது முக்கியமல்ல; எவ்வளவு வாக்கு என்பதே முக்கியம். மக்களவை தேர்தலில் பாஜக நிச்சயம் 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும். பெங்களூரு சென்ட்ரல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் பிரகாஷ் ராஜ். பாஜக மீதும், பிரதமர் மோடி மீதும் அவதூறாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்” என்று கூறினார்.

Share this story