கொரோனா பாதிப்பு அதிகரிப்பால், பிரதமர் மோடி அவசர ஆலோசனை.. கூடுதல் கட்டுப்பாடுகள்?

With the increase in corona damage, Prime Minister Modi urgently advised .. Additional restrictions

ஒமைக்ரான் வைரஸ் தொற்று காரணமாக, இந்தியாவில் 3-வது அலை உருவாகி கொரோனா பாதிப்பு அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது. 

தினந்தோறும் 10 ஆயிரம், 20 ஆயிரம் என அதிகரித்து வருகிறது. டெல்லி, மகாராஷ்டிர மாநிலத்தில்  ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. 

நேற்றைய அறிவிப்பைவிட, இன்று 6 சதவீதம் குறைந்த நிலையில் 1.6 லட்சத்தை கடந்த வண்ணமே உள்ளது.

இதனால், பெரும்பாலான மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. 

சில தினங்களுக்கு முன் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்த வேண்டும், மருத்துவ வசதிகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதன்பின், மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், இன்று மாலை மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அப்போது, தேவைப்பட்டால் மேலும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வலியுறுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
*

Share this story