பல்வேறு நலத்திட்டங்களுடன், மேலும் ஒன்று; பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

With various welfare schemes, one more; Prime Minister Modi laid the foundation

உத்தரப் பிரதேச மாநிலத்தில், இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. 

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைப்பதற்கான வேலைகளில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது.

இதனால், அம்மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசும், யோகி ஆதித்யநாத் அரசும் செயல்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள மீரட் நகரில் அமைக்கப்பட்டுள்ள மேஜர் தியான் சந்த் விளையாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார்.

சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில், விளையாட்டுக் பல்கலைக்கழகம் நிறுவப்படுகிறது. 

செயற்கை ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து, கைப்பந்து, கபடி மைதானம், டென்னிஸ் மைதானம், உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் குளம் உள்ளிட்டவை இங்கு அமைகின்றன.

துப்பாக்கிச் சுடுதல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், பளுதூக்குதல், வில்வித்தை உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி பெறும் வசதிகளும் இங்கு இருக்கும்' என பிரதமர் அலுவகம் தெரிவித்துள்ளது.
*

Share this story