ஒளிப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெறுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

By 
Withdraw the Cinematography Amendment Bill CP Minister Mc Stalin

ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா தொடர்பாக, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். 

கடும் எதிர்ப்பு :

மத்திய அரசு திரைப்படங்கள் வெளியிட, ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் திரைத்துறையினர் இடையே இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

நேற்று நடிகர் கார்த்தி, ரோகிணி உள்ளிட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, இதுகுறித்து கோரிக்கை விடுத்தனர். 

இந்நிலையில், ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "கருத்து சுதந்திரத்தை பறிக்கும் ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதா மாநில அரசுகளின் அதிகாரங்களையும் குறைக்கிறது. 

உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய அதிகாரத்தையும் குறைக்கிறது. வயது வாரியாக சென்சார் சான்று வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்" வலியுறுத்தியுள்ளார்.

பார்வையாளர்கள் புகார் :

ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டால், ஒரு படத்திற்கு வழங்கிய சான்றை பார்வையாளர்கள் புகார் அளித்தால் திரும்பப் பெற முடியும். 

சென்சார் சான்று அளிக்கும் குழுவுக்கே பிரச்னை இல்லையெனினும், சான்றை திரும்பப் பெற இந்த சட்டம் வழிவகுக்கும். அதனால், மத்திய அரசு கொண்துவந்துள்ள இந்த மசோதாவுக்கு திரைத்துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

ஏற்கனவே இருக்கும் சென்சார் நடைமுறைக்கு மேல், கூடுதல் சுமையை இச்சட்டம் உருவாக்குவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தமிழ் திரையுலகினரும் இதற்கு எதிராக குரலெழுப்பி வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
*

Share this story