உலகமகா ஒரு பதவி, நம்ம சிந்துவுக்கு இன்று கிடைச்சிடுச்சு..

New Posting to Sindhu

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் தடகள ஆணைய உறுப்பினராக பி.வி. சிந்து நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு 2021-2025 ஆண்டிற்கான தடகள ஆணைய உறுப்பினர்களை இன்று அறிவித்துள்ளது. 

6 பேர் கொண்ட இந்த குழுவில், இந்தியாவின் நட்சத்திர பாட்மிண்டன்  வீராங்கனை பி.வி. சிந்து இடம்பெற்றுள்ளார்.

அவருடன் சேர்ந்து ஐரிஸ் வாங் (அமெரிக்கா), ராபின் டேபிலிங் (நெதர்லாந்து ), கிரேசியா பாலி (இந்தோனேசியா ), கிம் சோயோங் (கொரியா ), செங்  சி வி  (சீனா) போன்றோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் 2025 ஆம் ஆண்டு வரை உறுப்பினர்களாக நீடிக்கவுள்ளனர். 

விரைவில், இந்த ஆணையத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 

Share this story