19-ந்தேதி டெஸ்ட் மேட்ச் : வாஷிங்டன் சுந்தர்-முகமது சிராஜுக்கு பதிலாக 2 வீரர்கள் சேர்ப்பு

19th Test Match: Washington Sunder-Mohammed Siraj replaced by 2 players *

கொரோனா பாதிப்பால் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். 

அவருக்கு பதிலாக இந்திய அணியில் ஜெயந்த், நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெஸ்ட் தொடர் முடிந்ததும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா விளையாடுகிறது. 

இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 19-ந்தேதி பார்ல் நகரில் நடக்கிறது. 

ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்று இருந்த ஆல்-ரவுண்டரான தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் விலகியுள்ளார். 

அவருக்குப் பதிலாக, சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த் சேர்க்கப்பட்டுள்ளார். 

இதேபோல், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தசைப்பிடிப்பால் அவதிப்படுவதால், அதைக் கருத்தில் கொண்டு, நவ்தீப் சைனி அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
*

Share this story