23-ந்தேதி ஜபிஎல் ஏலம் : 991வீரர்கள் பங்கேற்பு

iplcub

2023-ம் ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் வருகிற 23-ந்தேதி கொச்சியில் நடைபெறுகிறது. ஏலத்தில் பங்கு பெறும் வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்வது கடந்த நவம்பர் 30-ந்தேதியுடன் முடிவடைந்தது.

ஐ.பி.எல். மினி ஏலத்தில் பங்கேற்க 991 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 714 பேர் இந்தியர்கள். 14 வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் இருந்து 57 பேர் பதிவு செய்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து 52 வீரர்களும், வெஸ்ட் இண்டீசில் இருந்து 33 வீரர்களும், இங்கிலாந்தில் இருந்து 31 வீரர்களும், நியூசி லாந்தில் இருந்து 27 வீரர் களும், இலங்கையில் இருந்து 20 வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். மொத்தம் 277 வெளி நாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

அணி நிர்வாகங்கள் தாங்கள் தக்க வைத்து கொண்ட வீரர்களை தவிர்த்து இன்னும் 87 வீரர்களை தான் ஏலத்தில் தேர்வு செய்ய முடியும். பதிவு செய்த 991 வீரர் களில் 185 பேர் சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள். 786 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடாதவர்கள். 20 பேர் அசோசியேட் நாடுகளை சேர்ந்தவர்கள். வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி, ரூ.1.50 கோடி, ரூ.1 கோடி, ரூ.75 லட்சம், ரூ.50 லட்சம் என உள்ளது.

இதில் ரூ.2 கோடி அடிப்படை விலையில் 21 வீரர்கள் பதிவு செய்து உள்ளனர். பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரன், வில்லியம்சன், நிகோலஸ் பூரன், கேமமுன் கரீன் உள்பட 21 பேர் ரூ.2 கோடி அடிப்படையில் உள்ளனர். ரூ.2 கோடி மற்றும் ரூ.1.50 கோடி அடிப் படை விலை பட்டியலில் ஒரு இந்திய வீரர்கள் கூட இடம்பெறவில்லை.

ரூ.1 கோடி பட்டியலில் மயங்க் அகர்வால், கேதர் ஜாதவ், மனீஷ் பாண்டே ஆகிய 3 இந்திய வீரர்கள் உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்த பிராவே ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யவில்லை.
 

Share this story