3-வது டி20 கிரிக்கெட் : கடைசிக்கட்ட பரபரப்பில், இலங்கை த்ரில் வெற்றி..

By 
aust

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

முதலில் நடந்த இரு டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி பல்லேகலேயில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. 

அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 39 ரன்னில் அவுட்டானார். ஸ்மித் 37 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். 

சனாகா அதிரடி :

கடைசிக் கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஸ்டோய்னிஸ் 38 ரன்கள் எடுத்தார். இலங்கை சார்பில் தீக்‌ஷனா 2 விக்கெட், ஹசரங்கா, ஜெயவிக்ரமா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. கேப்டன் டாசன் சனகா மட்டும் ஓரளவு போராடினார். 

நிசங்கா 27 ரன்னும், அசலங்கா 26 ரன்னும் எடுத்தனர். சனகா கடைசிவரை போராடி அணியை வெற்றிபெறச் செய்தார் 

 6 விக்கெட் இழப்பு :

இறுதியில், இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. சனகா 54 ரன்னுடனும், கருணரத்னே 14 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என கைப்பற்றியது.
*

Share this story