உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில், இந்தியாவுக்கு 3-வது தங்கம் : வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

para

பிரான்சின் சாட்டௌரோக்ஸ் நகரில், பாரா உலக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெறுகிறது. 

இதில் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகாரா 250.6 என்ற உலக சாதனை புள்ளியுடன் தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார். 

அவரை தொடர்ந்து, இந்தியாவின் ஸ்ரீஹரி தங்கப்பதக்கம் வென்றார். 

இந்நிலையில், நடைபெற்ற பி6 - 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் மற்றும் மணீஷ் நர்வால் ஜோடி, சீன ஜோடியான யாங் சாவோ மற்றும் மின் லியை வீழ்த்தி, தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர். 

இந்த தொடரில், இந்திய அணி வெல்லும் 3-வது தங்கப் பதக்கம் இதுவாகும். 

தங்கப் பதக்கம் வென்ற மணீஷ் நர்வால், ரூபினா பிரான்சிஸ் ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
*
 

Share this story