3-வது டெஸ்ட் மேட்ச் : இஷான் கிஷன்- ஹனுமா விஹாரி ஜோடி, இன்றும் அசத்துவார்களா?

By 
3rd Test Match Ishant Kishan-Hanuma Vihari duo still going crazy

இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்போண்டைனில் நடைபெறும் டெஸ்ட்  தொடரில், தென்னாப்பிரிக்கா ஏ அணியுடன் விளையாடி வருகிறது . 

மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர், டிசம்பர் 9 ஆம் தேதி முடிவடைகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. 

டாஸ் வென்ற  தென்னாப்பிரிக்கா ஏ அணியின்  கேப்டன்  பீட்டர் மலன் பேட்டிங்யை தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய சரேல் ஏர்வி 75 ரன்கள் குவித்து நவ்தீப் சைனி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

2-வது நாள் :

அதைத் தொடர்ந்து, களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் டோனி சோர்சி 58 ரன்களிலும் , காயா சோண்டோ 56 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில், தென்னாப்பிரிக்கா  ஏ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் நவ்தீப் சைனி 3 விக்கெட்களையும் , சவுரப் குமார் 2 விக்கெட்களையும் , தீபக் சாகர் 1 விக்கெட்டும்  கைப்பற்றினர். இரண்டாவது நாள் ஆட்டம் இன்று பிற்பகல் தொடங்குகிறது.

முன்னதாக நடந்த ஆட்டத்தில், 19 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் தென்னாப்பிரிக்கா  ஏ அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 268 ரன்களுக்கு சுருண்டது.

சிறப்பான ஆட்டம் :

இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆட தொடங்கிய இந்திய அணி சற்று தடுமாறியது. தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி சா  5 ரன்னிலும் அபிமன்யு ஈஸ்வரன் 28 ரன்களிலும்  ஆட்டமிழந்தனர். இதன் பிறகு, களமிறங்கிய படிக்கல்  8 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹனுமா விஹாரி - இஷான் கிஷன் இணை சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது.

சிறப்பாக விளையாடிய ஹனுமா விஹாரி  63 ரன்களில் ஆட்டமிழந்தார். இரண்டாவது நாள் ஆட நேர முடிவில், இந்தியா ஏ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்துள்ளது.

இஷான் கிஷன் 86 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.மூன்றாவது நாள் ஆட்டம் இன்று பிற்பகல் தொடங்குகிறது. 

Share this story