ஃபுட்பால் தர்பாரில் 4-வது வெற்றி : சென்னை அணியின் செம கெத்து.. கள விவரம்..

4th win in football darbar Chennai team's camel .. Field details ..

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில், சென்னையின் எப்.சி அணி இதுவரை 4 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. 

இதில், பரபரப்பாக நடைபெற்ற லீக் போட்டியில், சென்னையின் எப்.சி. அணியும், ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணியும் மோதின.

இதில், சென்னையின் எப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தியது. 

சென்னை சார்பில், 
சென்னை வீரர் லுகாஸ் ஜிகிவிக்ஸ் 31-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். 

சென்னை அணி, தான் ஆடிய 9 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி, 3 டிரா என மொத்தம் 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

மற்றொரு போட்டியில், கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி.மற்றும் கோவா எப்.சி. அணிகள் மோதின. இதில் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. 
*

Share this story