இந்தியாவில், தென்ஆப்பிரிக்கா ஆடும் 5 போட்டிகள் : பிசிசிஐ தகவல்

pcci

ஐபிஎல் தொடர் முடிந்ததும், ஜூன் மாதம் இந்தியா வரும் தென் ஆப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் ஜூன் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 

இந்த சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்  பங்கேற்க உள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் ஜூன் 9ம் தேதி தொடங்க உள்ளது. 

2-வது போட்டி கட்டாக்கில் ஜூண் 12-ம் தேதி, 3-வது போட்டி விசாகப்பட்டினத்தில் ஜூன் 14-ம் தேதி, 

4-வது போட்டி ராஜ்கோட்டில் ஜூன் 17-ம் தேதி, 5-வது போட்டி பெங்களூருவில் ஜூன் 19-ம் தேதியும் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Share this story