அவுட் இன்றி 508 ரன்கள்; 13 வயது மாணவன் சாதனை..

By 
yash

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் யாஷ் சாவ்டே கிரிக்கெட்டில் வரலாறு படைத்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் ஜூனியர் பள்ளி போட்டியில் யாஷ் ஆட்டமிழக்காமல் 508 ரன்கள் எடுத்தார். நாக்பூரில் நேற்று நடைபெற்ற இந்த 40-40 ஓவர் ஆட்டத்தில் யாஷ் அணி சரஸ்வதி வித்யாலயா விக்கெட் இழப்பின்றி 714 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய சித்தேஷ்வர் வித்யாலயா அணி 5 ஓவர்களில் 9 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் சரஸ்வதி வித்யாலயா 709 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. யாஷ் தனது இன்னிங்ஸில் 178 பந்துகளைச் சந்தித்து 81 பவுண்டரிகள் மற்றும் 18 சிக்ஸர்களை விளாசினார்.

இந்த வகையில் மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடிய உலக சாதனை இலங்கையின் சிராத் சவுபெருமாவின் பெயரில் உள்ளது. 2022ல் இலங்கையில் நடந்த 15 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சிராத் 553 ரன்கள் குவித்தார்.

கிரிக்கெட் புள்ளி விவர நிபுணர் மோகன்தாஸ் மேனனின் தகவல்படி 500க்குமேல் ரன்கள் எடுக்கும் சாதனையை இந்திய பேட்ஸ்மேன்கள் 5 முறை செய்துள்ளனர்.

யாஷுக்கு முன், பிரணவ் தன்வடே (1009 நாட் அவுட்), பிரியன்ஷு மோலியா (556 ரன்கள்), பிரித்வி ஷா (546 ரன்கள்), தாடி ஹவேவாலா (515) ஆகியோர் பெரிய இன்னிங்ஸை ஆடிய இந்திய பேட்ஸ்மேன்கள்.
 

Share this story