50-வது முறையாக அரைசதம் : வார்னர், கோலியுடன் இணைந்த வீரர் யார் தெரியுமா?

 

virat88

ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 53-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தியது.

இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் 47 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 57 ரன் எடுத்தார். ஐ.பி.எல். போட்டியில் அவரது 50-வது அரை சதமாகும். 213 இன்னிங்சில் 50-வது அரை சதத்தை எடுத்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டியில் 50-வது அரைசதம் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை தவான் பெற்றார். டேவிட் வார்னர், விராட் கோலி ஆகியோருடன் அவர் இணைந்தார். வார்னர் 57 அரைசதம் அடித்து முதல் இடத்திலும், கோலி, தவான் 50 அரை சதத்துடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
 

Share this story