6-ந்தேதி, மாநில இளையோர் கைப்பந்துப் போட்டி : கலந்துகொள்ள விருப்பமா?
Sat, 23 Jul 2022

மாநில இளையோர் கைப்பந்து போட்டி ராஜபாளையத்தில் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டிக்கான சென்னை மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தேர்வு எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில், வருகிற 25-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது.
1.1.2002-க்கு பிறகு பிறந்தவர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள தகுதி படைத்தவர்கள்.
இந்த தேர்வில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தகுந்த வயது சான்றிதழுடன் வர வேண்டும் என்று சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் சி.ஸ்ரீகேசவன் தெரிவித்துள்ளார்.
அதோடு 9444842628 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
*