டெஸ்ட் மேட்சில் 8,000 ரன்கள் : சாதனை படைக்கிறார் கோலி..

8,000 runs in Test matches kohli sets a record ..

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, நாளை மறுநாள் தொடங்குகிறது.

இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,801 ரன்கள் அடித்துள்ளார்.  

சாதனை படைக்கிறார் :

விராட் கோலி தற்போது வரை 27 சதங்கள், 27 அரை சதங்கள் அடித்துள்ளார்.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா தொடரில் 199 ரன்கள் அடித்தால், 8,000 ரன்கள் எடுத்த 6-வது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைக்க இருக்கிறார்.

முதல் ஐந்து இடங்கள் :

இதுவரை சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், விவிஎஸ் லட்சுமணன் மற்றும் சேவாக் ஆகியோர் முதல் ஐந்து இடத்தில் உள்ளனர்.

27 சதம் அடித்துள்ள விராட் கோலி, மேலும் ஒரு சதம் அடித்தால் ஸ்டீவ் ஸ்மித், ஆலன் பார்டர், கிரீம் ஸ்மித் ஆகியோரை பின்னுக்குத் தள்ளுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
*

Share this story