கிரிக்கெட் களத்திற்கு வெளியே ஒரு சாதனை : விராட்கோலியின் மாஸ்

By 
kohli1

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சதம் அடிக்காமல் பல்வேறு விமர்சனங்களுக்கு தள்ளப்பட்டார். அவருக்கு பல டி20 தொடர்களில் ஓய்வும் வழங்கப்பட்டது.

கிரிக்கெட்டில் எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் சமூக வலைதளங்களில் விராட் கோலி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். களத்தில் சாதனைகளை முறியடித்ததோடு, சமீபத்தில் 50 மில்லியன் ட்விட்டர் பின்தொடர்பவர்களைக் கொண்ட முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.

இதேபோல் இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிக பாலோவர்கள் கொண்ட விளையாட்டு வீரர்கள் வரிசையில் 211 மில்லியன் பாலோவர்களுடன் விராட் கோலி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

கால்பந்து வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ (476 மில்லியன்) முதல் இடத்திலும் லியோனல் மெஸ்ஸி (356 மில்லியன்) 2-வது இடத்திலும் உள்ளனர். கோலிக்கு 49 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் ரசிகர்கள் உள்ளனர்.

சமூக ஊடகங்களில் அவரைப் பின்தொடர்பவர்களின் மொத்த எண்ணிக்கை 310 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. இரண்டு அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்துடன், கோலி 2022 ஆசிய கோப்பையின் போது ஃபார்முக்கு திரும்பினார்.

ஆசிய கோப்பைக்கு முன்பு ஒரு மாதமாக தனது பேட்டை தொடவில்லை என்று கோலி தெரிவித்திருந்தார்.

Share this story