ஆசிய கோப்பை கிரிக்கெட் : இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன?

match

ஆசிய கோப்பை 20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில், இந்திய அணியின் மோசமான பந்து வீச்சு மற்றும் பீல்டிங் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி கடைசி கட்டத்தில் 8 பந்துகளில் 16 ரன்கள் குவித்தார். அவரது அந்த ஆட்டம் பாகிஸ்தான் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. ஆனால், பரபரப்பான கட்டத்தில் களமிறங்கிய 18-வது ஓவரை ரவி பிஸ்மானி வீசினார்.

அப்போது, தான் ஆசிப் அலி களமிறங்கி இருந்தார். அவர் ரன் எதுவும் எடுக்காத நிலையில் (0 ரன்) இருந்தார்.

அப்போது, ரவி பிஸ்மானி வீசிய 17.3 ஓவரில் ஆசிப் அலி பந்தை வேகமாக அடிக்க முற்பட்டார். அப்போது, பேட்டில் சரியாக படாததால் பந்து கீப்பருக்கு பின்னே கேட்ச் வாய்ப்பாக மாறியது. அங்கு நின்றுகொண்டிருந்த அர்ஷ்தீப் சிங் கேட்ச் பிடிக்க முற்பட்டார்.

ஆனால், மிகவும் சுலபமான அந்த கேட்சை அர்ஷ்தீப் தவறவிட்டார். இதனை தொடர்ந்து 19-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். அந்த ஓவரில் 19 ரன்களை பாகிஸ்தான் அணி எடுத்தது. அதேபோல், இறுதி கட்டத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் அதிக அளவிலான 'ஒயிட்' பந்துகளை வீசினர். அதேபோல், ஒட்டுமொத்தமாக இந்த பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுக்கொண்டுத்தனர்.

குறிப்பாக, தலா 4 ஓவர்கள் வீசிய புவனேஸ்வர்குமார் 40 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 44 ரன்களையும், சாஹல் 43 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர். முக்கியமான கட்டத்தில் அர்ஷ்தீபால் தவறவிடப்பட்ட கேட்ச், 19-வது ஓவரில் 19 ரன்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் மோசமான பந்து வீச்சு இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

சூப்பர் 4 சுற்றில் இலங்கையை நாளை இந்தியா எதிர்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story