ஆசிய குத்துச்சண்டை போட்டி : மெகா வெற்றி பெறுகிறார் இந்திய வீரர்..

sumit

* ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்யன்ஷிப் போட்டி ஜோர்டானில் நடந்து வருகிறது. இதில் 75 கிலோ எடைப்பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித், தாய்லாந்தின் போர்வோர்ன் கடம்துவானை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் சுமித் 3-2 என்ற கணக்கில் போர்வோர்னை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியதோடு பதக்கத்தையும் உறுதி செய்தார். அவர் அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான உஸ்பெகிஸ்தானின் ஜாபரோவ் சைட்ஜாம்ஷித்தை எதிர்கொள்கிறார்.

* பாரா துப்பாக்கிசுடுதல் உலக சாம்பியன்ஷிப் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் ஐன் நகரத்தில் தொடங்கியது. இந்த தொடரின் 2-வது நாளில் இந்திய அணி முதல் பதக்கத்தை வென்றுள்ளது. இந்திய வீரர் ராகுல் ஜாகர் கலப்பு ஒற்றையர் 25மீட்டர் பிஸ்டல் எஸ்எச்1 பிரிவில் 21 மதிப்பெண்களுடன் வெண்கலப் பதக்கத்தை தட்டி சென்றார்.

இதை தொடர்ந்து, நடைபெற்ற போட்டியில் இந்திய கலப்பு அணி 25மீட்டர் பிஸ்டல் எஸ்எச்1-ல் ராகுல் ஜாகர் , நிஹால் மற்றும் சிங்ராஜ் ஆகியோர் தங்கப் பதக்கத்தை வென்றனர். இதன் மூலம் இந்திய அணி தற்போது வரை 2 பதக்கங்களை வென்றுள்ளது.

Share this story