ஆசிய எலைட் பாக்ஸிங் டுடே : பதக்கம் வென்றது இந்திய அணி..

boxing3

ஆசிய எலைட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடைபெறுகிறது.

இதில், இந்திய வீரர்கள் சுமித், கோவிந்த் குமார் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில், கோவிந்த் (48 கிலோ எடைப்பிரிவு), கஜகஜ்தான் வீரர் சன்ஜாரிடம் 0:4 என தோல்வியடைந்தார்.

இதேபோல் 75 கிலோ எடைப்பிரிவில் சுமித், நடப்பு ஆசிய சாம்பியன் ஜாபரோவிடம் (உஸ்பெகிஸ்தான்) 0:5 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார். தாய்லாந்து ஓபனில் சுமித், கோவிந்த் குமார் ஆகிய இருவரும் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

மற்ற இந்திய வீரர்களான சிவ தாபா, முகமது ஹசாமுதீன், நரேந்தர் ஆகியோர் அரையிறுதியில் மோத உள்ளனர். நாளை நடைபெறும் இறுதிப் போட்டிகளில் லவ்லினா, பர்வீன் உள்ளிட்ட 5 இந்திய வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர். 
 

Share this story