கேப்டன்ஷிப்பில் அசாருதீன், டோனி வரிசையில் ரோகித் சர்மா புதிய சாதனை..
 

rohitcap

இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20, மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதன் மூலம், புதிய சாதனை பதிவாகி உள்ளது. 

இங்கிலாந்தில் ஒருநாள் மற்றும் டி20 தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். 

இங்கிலாந்தில் ஒருநாள் தொடரை 1990-ம் ஆண்டு முகமது அசாருதீன் தலைமையில் வெற்றி பெற்றிருந்தது. அதனையடுத்து 2014-ம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் ஒருநாள் தொடர் கைப்பற்றப்பட்டது. 

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதன் மூலம் டோனி, அசாருதின் ஆகியோரின் சாதனையுடன் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.
*

Share this story