பேட்மிண்டன் இறுதிப்போட்டி : இந்தியா-இந்தோனேசியா இன்று மோதல்
 

By 
thomas1

தாமஸ் கோப்பை பேட்மிண்டனின் இறுதிப்போட்டியில் இந்தியா-இந்தோனேசியா அணிகள் இன்று மோதுகின்றன.

தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில், ஆண்களுக்கான தாமஸ் கோப்பை போட்டியில், அரைஇறுதியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் முன்னாள் சாம்பியனான டென்மார்க்கை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

1949-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த போட்டியில், இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருப்பது இதுவே முதல்முறையாகும். 

இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், பிரனாய் (ஒற்றையர் பிரிவு), சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி (இரட்டையர் பிரிவு) ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். 

இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இந்தோனேசியாவுடன் மோதுகிறது. 

பெண்களுக்கான உபேர் கோப்பை போட்டியில், நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் தென் கொரியா 3-2 என்ற கணக்கில் நடப்பு சாம்பியன் சீனாவை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.
*

Share this story