பேட்மிண்டன் டுடே : முந்தி வந்து, பதக்கம் வென்றார் நம்ம சிந்து..
Sat, 30 Apr 2022

உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் சிந்து, வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்து இருக்கிறார்.
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்து வருகிறது.
இதில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலக சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான அகானா யமாகுச்சியை (ஜப்பான்) எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-13, 19-21, 16-21 என்ற செட் கணக்கில் யமாகுச்சியிடம் தோல்வியடைந்தார்.
இதன் மூலம், உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் சிந்து வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்து இருக்கிறார்.
இதனையடுத்து, ஜப்பான் வீராங்கனை யமாகுச்சி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
*