விளையாடுவதற்கு முன், வீரர்கள் செய்த செயல் என்னை கவர்ந்தது : பிரதமர் மோடி

தடகள விளையாட்டு போட்டியில் பங்கேற்க புறப்படுவதற்கு முன்பு, தேசிய போர் நினைவகத்தைப் அவர்கள் பார்வையிட்டது, தம்மை மிகவும் கவர்ந்தது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
செவித்திறன் இழந்தோருக்கான டெப்லிம்பிக் 2021, விளையாட்டுப் போட்டிகள் பிரேசில் நாட்டில் நடைபெறுகின்றன. இதில், பங்கேற்பதற்காக இந்திய தடகள வீரர்கள் பிரேசில் சென்றுள்ளனர்.
அவர்களுக்கு பிரதமர் மோடி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது :
இன்று தொடங்கும் # Deaflympics2021 -ல் இந்தியா நமது குழுவை உற்சாகப்படுத்துகிறது.
நமது திறமையான விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
விளையாட்டுப் போட்டிக்கு புறப்படுவதற்கு முன், தேசிய போர் நினைவகத்தைப் பார்வையிட்ட அவர்களின் செயல் என்னை மிகவும் கவர்ந்தது' என தெரிவித்துள்ளார்.