இளம் கிரிக்கெட் வீரர் மீது கொடூர தாக்குதல் - 'கோமா ஸ்டேஜ்' : ரசிகர்கள் பிரார்த்தனை

mon

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை சேர்ந்த 20 வயது இளம் கிரிக்கெட் வீரர் மாண்ட்லி குமாலோ. 

இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த இளைஞர் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் விளையாடியவர். 

இவர், சமீபத்தில் முடிந்த போட்டியில் வெற்றி பெற்றதற்காக, கடந்த சனிக்கிழமை இரவு இங்கிலாந்தில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் பகுதியில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

அப்போது, இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனை எழுந்துள்ளது. 

இதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மாண்ட்லியை மிக கடுமையாக தாக்கியுள்ளார். 

இதில், படுகாயம் அடைந்த மாண்ட்லி மயக்கமடைந்து விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு, அவர் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, கோமாவுக்கு சென்றதாக தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, அவர் விரைவில் குணமடைய தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
*

Share this story