டி20 உலகக்கோப்பை தொடருக்கு பும்ரா, ஹர்ஷல் படேல் ரெடி?

pum2

7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்த போட்டிக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என ஏதிர்பார்க்கப்டுகிறது.

இந்த நிலையில் ஆசிய கோப்பையில் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா ,ஹர்ஷல் படேல் ஆகியோர் வருகிற 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்திய இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் காயத்த்தில் இருந்து மீண்டு இப்போது நல்ல நிலையில் இருப்பதாகவும், தேசிய கிரிக்கெட் அகாடமியில் தொடர்ந்து பயிற்சி பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share this story