இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இருந்து, கேப்டன் பவுமா திடீர் விலகல்..

bavuma

தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் ஒருநாள், டி20 தொடரில் விளையாடுவதற்காக, இங்கிலாந்து செல்ல உள்ளது. ஜூலை 19 முதல் போட்டிகள் தொடங்குகிறது. 

இந்த தொடரில் இருந்து ஒயிட் பால் கேப்டனான பவுமா விலகி உள்ளார். மணிகட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் இங்கிலாந்து எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார். 

ஜூலை 27 முதல் 31 வரை நடக்கவிருக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அயர்லாந்துக்கு எதிராக ஆகஸ்டு 3 முதல் 5 வரை நடக்கும் 2 போட்டிகள் கொண்ட தொடரிலும் டேவிட் மில்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஒருநாள் தொடர் ஜூலை 19 முதல் 24 வரை நடைபெறுகிறது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் காயம் ஏற்பட்ட நிலையில் பவுமாவுக்கு எட்டு வாரங்கள் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. 

அயர்லாந்திற்கு எதிரான டி20 ஐத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. 

லார்ட்ஸில் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்டு 17-ந் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் அணியின் கேப்டனாக டீன் எல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்தியாவுக்கு எதிராக அறிமுகமான இளம் வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸும் டி20 அணியில் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி டி20 அணிக்கான முதல் போட்டியில் ஆட உள்ளார். 

அதே நேரத்தில், வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா ஒருநாள் தொடரில் இருந்து விலகுகிறார்.
*

Share this story