சாம்பியன்ஷிப் போட்டி : குஷியாய் குத்தாட்டம் போட்டு, கெத்து காட்டிய வீராங்கனைகள்..

common4

ஐரோப்பிய பெண்கள் சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், இங்கிலாந்து - ஜெர்மனி அணிகள் மோதின. 

பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் 56 ஆண்டு கால ஐரோப்பிய பெண்கள் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியின் வரலாற்றில், முதல் முறையாக இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. 

இந்த வெற்றிக்கு பின் இங்கிலாந்து பெண்கள் கால்பந்து அணியின் மேலாளர், நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். 

இந்த நிகழ்வு பல்வேறு தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. 

அப்போது, அங்கு வந்த இங்கிலாந்து கால்பந்து வீராங்கனைகள் செய்தியாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்த அணியின் மேலாளர், நிர்வாகிகளுக்கு நடுவே சென்றனர். 

மேலும், அவர்களை சுற்றி ஆடி பாடி கொண்டாடினர். 

இப்போது, செய்தியாளர் சந்திப்பு நடைபெற்ற இடத்தில் இருந்த மேஜை மீது ஏறிய இங்கிலாந்து அணியின் கோல் கீப்பர் மற்றும் வீராங்கனைகள் ஆட்டம்போட்டனர். 

இந்த நிகழ்வால், அங்கு கூடியிருந்த அனைவரும் மகிழ்சி வெள்ளத்தில் ஆரவாரமடைந்தனர்
*

Share this story