சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் : உதயநிதி தொடங்கி வைத்தார்

udhaya6

தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் (2022-23) இன்று தொடங்கியது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து நடத்தும் இந்த விளையாட்டுப் போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்கா விளையாட்டு மைதானம், தியாகராய நகர் நடேசன் பூங்கா எதிரில் உள்ள கண்ணதாசன் மைதானம் ஆகியவற்றில் போட்டிகள் நடந்தது.

இந்த போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார். கபடி, பேட்மிண்டன், கால்பந்து, செஸ், கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆண்கள், பெண்களுக்கு போட்டிகள் நடந்தது.
 

Share this story