சென்னை மாவட்ட சூப்பர் டிவிசன் ஹாக்கி லீக் போட்டி தொடக்கம்..

hockey6

சென்னை ஹாக்கி சங்கம் சார்பில், சூப்பர் டிவிசன் லீக் போட்டி எழும்பூர் மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (1-ந் தேதி) தொடங்குகிறது. 

இதில் ஐ.ஒ.பி., இந்தியன் வங்கி, தெற்கு ரெயில்வே, ஐ.சி.எப்., வருமான வரித்துறை உள்பட 15 அணிகள் பங்கேற்கிறார்கள். 

இந்த போட்டியை எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பரந்தாமன் தொடங்கி வைக்கிறார். 

நாளைய தொடக்க ஆட்டத்தில் இந்திய விளையாட்டு ஆணையம்-வருமானவரித்துறை அணிகள் மோதுகின்றன. 

மேற்கண்ட தகவலை சென்னை ஹாக்கி சங்க செயலாளர் உதயகுமார் தெரிவித்தார்.

Share this story