உலகை வியப்பில் ஆழ்த்திய சென்னை சிறுவன் பிரக்ஞானந்தா : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
 

chess9

நார்வேயில் நடைபெற்ற குரூப் ஏ ஓபன் செஸ் போட்டித் தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய இளம்வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். 

மொத்தம் 9 சுற்றுகள் நடந்த இந்தப் போட்டியில் 6 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளில் டிரா என 7.5 புள்ளிகள் பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். 

இந்நிலையில், நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு :

'சில மாத இடைவெளியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இரு முறை வீழ்த்தி, உலகை வியப்பில் ஆழ்த்திய நம் சென்னை சிறுவன் பிரக்ஞானந்தா, தற்போது நார்வே செஸ் தொடரில் வென்று மீண்டும் இந்தியாவுக்கே புகழ் சேர்த்துள்ளார். 

வெற்றிகளும், புகழ் மாலைகளும் மென்மேலும் குவியட்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
*

Share this story