செஸ் கிராண்ட் மாஸ்டர் : தமிழகத்தை சேர்ந்த பிரனேஷ் சாதனை..

pranesh

தமிழகத்தைச் சேர்ந்த செஸ் மாஸ்டர் பிரனேஷ் இந்தியாவின் 79-வது செஸ் கிராண்ட்மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், தமிழகத்தின் 28-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார்.

இவர் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி, ஆசிய செஸ் போட்டியில் தங்கம், 16 வயதுக்கு உட்பட்ட சர்வதேச செஸ் தொடரில் வெண்கலம் வென்றுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவர் பிரனேஷ். இவர் காரைக்குடி வித்யாகிரி பள்ளியில் படித்து வருகிறார்.

தந்தை முனிரத்தினம் ஜவுளிக்கடை ஒன்றில் கணக்கராகவும், அம்மா மஞ்சுளா அங்கன்வாடி பணியாளராகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story