செஸ் 'கெத்து' : உலக சாம்பியனை வீழ்த்தினார் தமிழக வீரர்..

chesstamil

ஏய்ம்செஸ் ரேபிட் ஆன்லைன் சாம்பியன்ஷிப் செஸ் தொடர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் 9 சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 7 தொடர்கள் முடிந்துள்ள நிலையில், 8வது தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் ஒன்பதாவது சுற்று ஆட்டத்தில் 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனை தமிழகத்தைச் சேர்ந்த 16 வயதான குகேஷ் எதிர்கொண்டார்.

வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 26வது காய் நகர்த்தலின் முடிவில் கார்ல்சனை வீழ்த்தினார். முன்னதாக நடைபெற்ற ஏழாவது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி, கார்ல்சனை வீழ்த்தி இருந்த நிலையில், தற்போது தமிழக வீரர் குகேஷ்சும் உலக சாம்பியன் கார்ல்சனை தோற்கடித்துள்ளார்.

மேலும் கார்ல்சனை வீழ்த்திய இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. முன்னதாக இதே சாம்பியன்ஷிப் முதல் மற்றும் நான்காவது தொடரில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Share this story