செஸ் ஒலிம்பியாட் போட்டி :  உலக சாம்பியனுக்கு இன்னொரு வெற்றி..

By 
mag1

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் இன்று இரண்டாவது நாளாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. 

3 மணியளவில் தொடங்கிய 2வது சுற்றுக்கான இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 6 அணிகள் களம் இறங்கின. 

ஓய்வில் இருந்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா களத்தில் இறங்கினார். 

இந்தியா ஓபன் பி பிரிவில் விளையாடிய தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றிப் பெற்றார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியில் விளையாடி வரும் நிலையில், மெக்சிகோ வீரரை வீழ்த்தி தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திகேயன் முரளி வெற்றிப் பெற்றார். 

சிங்கப்பூர் அணிக்கு எதிராக விளையாடிய இந்தியா 3-வது அணியில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றிப்பெற்றுள்ளார். 

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரில் நார்வே வீரரும் உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் வெற்றிப் பெற்றுள்ளார். 2-வது சுற்றில் உருகுவே வீரர் மேயர் ஜார்ஜை உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் வீழ்த்தினார். 

மேலும், இந்த தொடரில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 8 வயது வீராங்கனை ராண்டா சேடர் வெற்றிப் பெற்றுள்ளார். 

இவர், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற குறைந்த வயது வீராங்கனை ஆவார்.
*

Share this story