செஸ் ஒலிம்பியாட் : களம் இறங்கும் தமிழக வீரர்கள் 8 பேர் விவரம்..
 

chess13

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. 

இந்த பிரமாண்ட போட்டித் தொடரில், சுமார் 188 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் வீரர்கள் கலந்துக்கொண்டு விளையாட உள்ளனர். 

இதன்படி, இந்தியா ஓபன் பிரிவில் 3 அணிகளையும், பெண்கள் பிரிவில் 3 அணிகளையும் களம் இறக்குகிறது. 

இந்திய அணியில் இடம் பெற்று விளையாடவுள்ள தமிழக வீரர்களின் விவரம் ; 

பிரக்ஞானந்தா - வயது 16 -உலக தரவரிசை பட்டியல் - 107 

ர.வைசாலி - வயது 21 - உலக தரவரிசை பட்டியல் - 29 

அதிபன் பாசுகரன் - வயது 29 - உலக தரவரிசை பட்டியல் - 219 

கிருஷ்ணன் சசிகிரண் - வயது 41 - உலக தரவரிசை பட்டியல் - 119 

எல்.நாராயணன் - வயது 24 - உலக தரவரிசை பட்டியல் - 89 

குகேஷ் - வயது 16 - உலக தரவரிசை பட்டியல் - 54 

கார்த்திகேயன் முரளி - வயது 23 - உலக தரவரிசை பட்டியல் - 173 

பி. சேதுராமன் -வயது 29 - உலக தரவரிசை பட்டியல் - 151 

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 8 தமிழக வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

Share this story