செஸ் ஒலிம்பியாட் போட்டி : இந்திய அணியின் ஆடுகள விவரம்..
 

chess14

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில், இந்திய ஏ அணி தொடர்ந்து முன்னேறி வருகிறது. 

நடந்த 6-வது சுற்று ஆட்டத்தில், இந்திய 'சி' அணியை இந்திய 'ஏ' அணி 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. 

அதன் பின்னர், 7-வது சுற்றில் அசர்பைஜான் அணியுடன் விளையாடியது. இப்போட்டியிலும், இந்திய ஏ அணி வெற்றி வாகை சூடியது. 

இந்தியா ஏ அணியின் முக்கிய வீராங்கனையான ஹம்பி கோனேரு தோல்வியடைந்தார். ஆனால், வைஷாலி மற்றும் டானியா சச்தேவ் ஆகியோர் வெற்றி பெற்றதால், 2.5-1.5 என்ற கணக்கில் அணி வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஏ அணி மொத்தம் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. 

அடுத்து உக்ரைன், அர்மீனியா, ஜார்ஜியா தலா 12 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இன்று நடக்கும் 8-வது சுற்றில் உக்ரைனுடன் இந்தியா ஏ அணி விளையாட உள்ளது. 

இதேபோல், இந்திய பி அணி, 7வது சுற்றில் கியூபா அணியை 3.5-0.5 என்ற புள்ளி கணக்கில் வென்றது. 

இது இந்திய பி அணிக்கு 6-வது வெற்றியாகும்.
*

Share this story