செஸ் ஒலிம்பியாட் 'கெத்து' : 7-வது தடவையும் தமிழக வீரர் வெற்றி..
 

lpo

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. 

11 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது. 

இந்தப் போட்டியில், இந்தியா சார்பில் ஆண்கள் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் கலந்துகொண்டு விளையாடி வருகின்றன. 

இந்திய 'பி' அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் குகேஷ் தொடர்ந்து அசத்தி வருகிறார்.

6 சுற்றுகளில் விளையாடிய அவர், 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றார். நடந்த 7-வது போட்டியிலும் வெற்றி வாகை சூடினார். 

இன்றைய போட்டியில், கியூபா அணி வீரர் கார்லஸ் டேனியலை 46 வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றார். 

இந்திய ஓபன் பிரிவு 'சி' அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
*

Share this story