செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா : 'நம்மைப் போல, அண்ணன்-தங்கை யாருமில்லை' என ஓர் வெற்றி நெகிழ்ச்சி
 

By 
chesso5

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி கடந்த 10-நாட்களுக்கு மேல் நடைபெற்றது. 

செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று தமிழகத்திற்கு பெருமையாய நிறைவு பெறுகிறது.

இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர். 

நிறைவு விழாவில், டிரம்ஸ் சிவமணியுடன் முதல்வர் ஸ்டாலினும் டிரம்ஸ் வாசித்து அசத்தினார். 

இந்தியாவின் செஸ் வீரராக இங்கு நிற்பதில், பெருமை அடைகிறேன் என சர்வதேச கூட்டமைப்பின் துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, பதக்கம் பெற்ற வீரர்களுக்கு விருது அளிக்கும் விழா நடைபெற்றது. 

இந்நிலையில், 3-வது போர்டில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது அக்கா வைஷாலி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. 

அக்காவும் தம்பியும் ஒன்றாகச் சேர்ந்து விருது வென்றது, அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
*

Share this story