செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா : சிவமணியுடன், டிரம்ஸ் வாசித்து, முதல்வர் ஸ்டாலின் கலக்கல்..

chesso4

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், கடந்த 28-ம் தேதி தொடங்கி கடந்த 10-நாட்களுக்கு மேல் நடைபெற்றது. 

செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதி நாள் போட்டிகள் நேற்று நடைபெற்றது. 

செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்றது. 

இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர். 

மேலும், இதில் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 

இதில், இந்தியாவின் இதயத் துடிப்பு அதாவது, 'ஹார்ட் பீட்ஸ் ஆஃப் இந்தியா' என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடந்தது. 

இதில் டிரம்ஸ் சிவமணி, வீணை ராஜேஷ் வைத்யா, நவீன்குமார், கீ போர்டு ஸ்டீபன் தேவசிஆகியோர் சேர்ந்து ஒரே மேடையில் அசத்தினர். 

அதன்பின், டிரம்ஸ் வாசித்தபடியே மேடையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்த இருக்கை அருகே சென்றார். 

அப்போது, முதலமைச்சர் எழுந்து நின்று சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்து அசத்தினார்.
*

Share this story